சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம்.[2] இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள். சுந்தரர் தாண்டக நாடாகிய தொண்டை நாட்டில் ஈசன் மகிழ்ந்துறையும் இடங்கள் தோறும் தொழுது வண்டு ஒலிக்கும் முல்லை நிலங்களையும் குறிஞ்சி நிலங்களும் கடந்து எட்டு திக்குகளிலும் உள்ளவர்கள் வந்து தொழும் கழுகுன்றினை அடைந்தார். தேன் நிரம்பிய மலர் சோலைகள் சூழ்ந்த திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருதொன்டர்கள் மிகுந்த வியப்புடன் மகிழ்ந்து எதிர்கொள்ள எழுந்தருளி வெண் திங்களை அணினத் சுடர் கொழுந்தை வேதகிரி பெருமானை வணங்கி துதித்து இனிய இசையினுடைய திருபதிகம் பாடினார். தண்டமாந்த் திருநாட்டுத் தனிவிடையர் மகிழ் இடங்கள் தொண்டர் எதிர்கொண்டனைத் தொழுது போய் தூய நதி வண்டறையும் புலவு மலை மருதம் பல கடந்தே என்டிசையோர் திருகழுகுன்றை எய்தினார். தேனார்ந்த மலர் சோலை திருகழுகுன்றத் தடியார் ஆணாத விருபினேடும் எதிர் கொள்ள அடைந்தருளி துனால் வெண் மதியணிந்த சுடர்க் கொழுந்தை தொழுநிறைஞ்சி பாநாடும் இன்னிசையின் திருப்பதிகம் பாடினார்.
பாடல் எண் : 1
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே நின்ற பாவ வினைகள்தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம் கன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
பாடல் எண் : 2
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே பிறங்கு கொன்றை சடைய னெங்கள் பிரானிடம் நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி கறங்கு வெள்ளை யருவித் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 3
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும் நம் வினைகள் அல்கி யழிந்திடத் தோளு மெட்டு முடைய மாமணிச் சோத்யான் காள கண்டனுறையுந் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 4
வெளிறு தீரத் தொழுமின் வென்பொடி யாடியை முளிறிலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம் பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக் களிறினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 5
புலைகள் தீர தொழுமின் புன்சடைப் புண்னியன் இலைகொல் சூலப் படைய னெந்தை பிரானிடம் முலைகளுண்டு தழுவி புறவில் குட்டியொடுமுசுக் கலைகள் பாயும் புரவிற் புறவில் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 6
மடமு டைய அடியார் தம்மனத் தேயுற விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன் படமு டைய அரவன் டான்பயி லும்மிடம் கடமு டைய புறவிற் றண்கழுக் குன்றமே.....
பாடல் எண் : 7
ஊன மில்ல அடியார் தம்மனத்தேயுற ஞான மூர்த்தி நட்ட மாடி நவிலும்மிடம் தேனும் வண்டும் மதுவுன் டின்னிசை பாடியே கான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே.....
பாடல் எண் : 8
அந்த மில்லா அடியார் தம்மனத் தேயுற வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே கந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே.....
பாடல் எண் : 9
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன் குழைகொள் காதன் குழகன் தானுறை யும்மிடம் மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே...
பாடல் எண் : 10
பல்லில் வெள்ளைத் தலையன் தான்பயி லும்மிடம் கல்லில் வெள்ளை யருவித் தண்கழு குன்றினை மல்லின் மல்கு திறன்தோ ளுரன் வனப்பினால் சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.